6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு..
கிழகாசிய நாடுகளில் ஒன்று ஜப்பான். நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் பசிபிக்கிஇன் "நெருப்பு வளையம்" பகுதியில் அமைந்துள்ளதால் ஜப்பான், நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நடாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உள்ளூர் நேரம் மாலை 5:03 மணிக்கு சுமார் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ள சான்ரிக் கடற்கரைக்கு அருகே சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சுமார் 17:03 மணியளவில், சான்ரிகு கடற்கரையை மையமாகக் கொண்ட ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் உடனடியாக ஒரு தகவல் தொடர்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் உடனடியாக கடற்கரையிலிருந்து வெளியேறவும். வரக்கூடிய சுனாமி எதிர்பார்த்ததை விட பெரியதாக இருக்கலாம். ஆதலால் எச்சரிக்கையாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.