சீனாவில் நிலநடுக்கம்: 116 பேர் உயிரிழப்பு...
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். 4000-த்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ராணுவ வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் தீவிர மீட்புப் பணியில் உள்ளனர்.