ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! 3 மாத இடைவேளையில் இரண்டாவது நிலநடுக்கம்!!
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று (டிச.10) காலை 9.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.