“நீங்க ஒவ்வொருத்தரும் ஒரு போர் வீரருக்கு சமம்” - பூத் லெவல் ஏஜென்ட்ஸை உற்சாகப்படுத்திய தவெக தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் பேசியதாவது, “கோவை என்றதும் இந்த மண்ணோட மக்களோட மரியாதைதான் ஞாபகம் வரும். இந்த கூட்டம் ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் அல்ல. நம்ம ஆட்சிக்கு வரணும் என நினைப்பதே மக்களுக்காகத்தான். இந்த பூத் லெவல் ஏஜென்ட்ஸ் பயிற்சி பட்டறையில் மக்களுக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்க போகிறோம் என்பதை பற்றி மட்டுமே பேசப்போகிற பயிற்சி பட்டறை கிடையாது. அதுவும் முக்கியம்தான். ஆனால், அதையும் தாண்டி மக்களுடம் எப்படி தொடர்பில் இருக்கப்போகிறோம் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி பட்டறை.
இதற்கு முன்பு நிறை பேர் வந்து சென்று பொய் சொல்லியிருக்கலாம். மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்திருக்கலாம். அதற்காக நான் இங்கு வரவில்லை. அதை இனிமேல் நடக்காது. நம் கட்சி மேல் நம்பிக்கை கொண்டு வரப்போவது பூத் லெவல் ஏஜென்ட்ஸ் நீங்கதான். நீங்க ஒவ்வொருத்தரும் ஒரு போர் வீரருக்கு சமம். நம்ம ஏன் வந்திருக்கிறோம், எதுக்கு வந்திருக்கிறோம், எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க போகிறோம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அப்போது கண்டிப்பாக மக்கள் உங்களிடம் என்ன அனுபவம் இருக்கிறது என்று கேட்பார்கள். ஆனால், நீங்க யாரு உங்களுடைய திறமை என்னவென்று எனக்கு தெரியும்.
நம்மிடம் என்ன இல்லை, மனதில் நேர்மை இருக்கிறது, கறைபடியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. லட்சியம் இருக்கு, உழைக்க வேண்டும் என்ற தெம்பு இருக்கிறது, பேசுவதற்கு உண்மை இருக்கிறது, களம் ரெடியாக இருக்கிறது. இதுக்கு மேல வேற என்ன வேண்டும் போய் கலக்குங்க”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.