For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை வெளியாகிறது துல்கர் சல்மானின் #LuckyBaskhar டிரெய்லர்!

01:50 PM Oct 20, 2024 IST | Web Editor
நாளை வெளியாகிறது துல்கர் சல்மானின்  luckybaskhar டிரெய்லர்
Advertisement

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘லக்கி பாஸ்கர்’. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

https://twitter.com/dulQuer/status/1847889115301155049

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. முதலில் செப்.7 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement