துல்கர் சல்மானின் ’காந்தா’ பட டிரெய்லர் வெளியீடு..!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரூ 100 கோடி வசூலித்து மிரட்டியது. இதனை தொடர்ந்து துல்கர் சல்மான நடிப்பில் வெளியீட்டுக்கு தயராகியுள்ள படம் காந்தா.
இப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் மூலம் நடிகை பாக்யஸ்ரீ போஸ் தமிழில் அறிமுகமாகிறார்.
காந்தா திரைப்படம் வருகிற நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திலிருந்து இதுவரை, ‘கண்மணி நீ’, 'ரேஜ் ஆஃப் காந்தா’ ஆகிய பாடல்கள் வெளியாகிருந்தன.
இந்த நிலையில் தற்போது காந்தா படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
The world of Kaantha unfolds today!💎
TRAILER OUT NOW!💥Tamil - https://t.co/BrNytjBTok
Telugu - https://t.co/NUKPj5wKg8
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse…
— Dulquer Salmaan (@dulQuer) November 6, 2025