Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திரைத்துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த துல்கர் சல்மான்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த காந்தா படக்குழு!

துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
07:53 PM Feb 03, 2025 IST | Web Editor
Advertisement

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் லக்கி பாஸ்கர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இதனைத்தொடர்ந்து இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்கு 'காந்தா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை வழங்குகிறது.

துல்கர் சல்மான் திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக காந்தா படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை துல்கர் சல்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags :
13 years Film IndustryDulquer SalmaanKaanthaRana Daggubati
Advertisement
Next Article