For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்!

10:05 AM May 03, 2024 IST | Web Editor
சாலை வசதி இல்லாததால்  இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்
Advertisement

முறையான சாலை வசதி இல்லாததால்,  இறந்தவரின் உடலை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலநிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கடல்
மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது நெக்னாமலை கிராமம்.  இந்த கிராமத்தில் 172 குடும்பங்களை சேர்ந்த 750 பேர் வசித்து வருகின்றனர்.  இந்த மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை சாலை வசதி ஏதும் இல்லை. இதனால் தொடர்ந்து அன்றாட தேவைக்கும்,  மருத்துவ தேவைக்கும் 7 கிமீ தூரம் நடந்து சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.

அதே நேரத்தில் கர்ப்பிணிளுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலும் சரி,  உயிரிழப்புகள்
ஏற்பட்டாலும் சரி டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையே இன்னும் அங்கு உள்ளது. இதனை பார்த்த அங்குள்ள வனத்துறையினர் மக்களின் சிரமத்தை குறைக்க அவர்களின் ஒத்துழைப்புடன் மண் சாலை அமைத்தனர்.  இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். இருப்பினும் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் இந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்து (78) என்பவர் உடல்நிலை சரியில்லாததால் வேலூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த அந்த முதியவரின் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு சாலை வசதி இல்லாததால் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்றுள்ளனர்.

இந்த அவலநிலை ஒவ்வொரு அவசர சூழ்நிலைகளிலும் ஏற்படுவதாகவும், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும்  சாலைவசதி இல்லாமல் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  அக்கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement