ஓசூரில் கடும் பனிப்பொழிவு | வாகன ஓட்டிகள் அவதி!
ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சூளகிரி, பாகலூர், ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் பொழுது விடிந்த பிறகும் கடுமையான பனிமூட்டம் நிலவியது. கடுமையான குளிரும் வாட்டி வதைப்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அவதிக்குள்ளானர்.
இதையும் படியுங்கள் : அரையாண்டு விடுமுறை | பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
குறிப்பாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பெங்களூர் தர்மபுரி நெடுஞ்சாலை ஆகிய பிரதான நெடுஞ்சாலைகளில் வெண்போர்வை போர்த்தியது போல கடுமையான மூடுபனி பொழிவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு வாகனங்களை இயக்குகினர். விவசாயிகளும் விளை பயிர்களை குறிப்பாக மலர்கள், காய்கறிகளை சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு சாலைகளில் செல்ல இயலாத நிலையில் அவதிக்குள்ளாகியுள்ளனர்.