For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய சிறுவனை கௌரவித்த துபாய் போலீஸ்...எதற்காக தெரியுமா?

04:37 PM May 15, 2024 IST | Web Editor
இந்திய சிறுவனை கௌரவித்த துபாய் போலீஸ்   எதற்காக தெரியுமா
Advertisement

துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப் பட்டுள்ளார். 

Advertisement

துபாய் போலீஸ்,  இந்திய சிறுவர் முஹம்மது அயன் யூனிஸை பாராட்டி,  அவனுக்கு சான்றிதழ் வழங்கிய புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.  சுற்றுலா பயணிகளின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கௌரவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார்.  அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார்.  பார்த்த உடன் அதனை எடுத்து சென்று போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் அதற்குள் அந்த சுற்றுலா பயணி அவரது தாயகத்திற்கு திரும்பியுள்ளார்.  பின்னர் அவரை மீண்டும் தொடர்பு கொண்டு அந்த கடிகாரத்தை கொடுத்துள்ளனர்.  தனது கடிகாரத்தை பெற்ற பிறகு துபாயின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து அவரது மனதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சுற்றுலாக் காவல் துறையின் இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜல்லாஃப்,  அவரது துணை லெப்டினன்ட் கர்னல் முஹம்மது அப்துல் ரஹ்மான் மற்றும் சுற்றுலா துறையின் தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் ஒன்றினை வழங்கி கௌரவித்துள்ளனர்.

Tags :
Advertisement