Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் !

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
07:34 AM Mar 08, 2025 IST | Web Editor
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் சிலர் போதைப்பொருள் கடத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கப்பலில் சோதனை நடத்தியுள்ளனர்.

Advertisement

அப்போது மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப் பொருள் 30 கிலோ சிக்கி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் துறைமுக பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DrugsinvestigationMaldivesPoliceseaseizedsmugglethuthukudi
Advertisement
Next Article