Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!
12:54 PM Mar 24, 2025 IST | Web Editor
Advertisement

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து செல்லும் விமானங்களில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க சுங்கத்துறை அதிகாரிகள் சோதகையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீக காலமாக வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தடைந்தது. இந்த  விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகிக்கும் வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடமையில் மறைத்து ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருளை கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பயணியை தனியாக அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Airportnews7 tamilNews7 Tamil UpdatesTrichy
Advertisement
Next Article