Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போதை பொருள் கடத்தல் விவகாரம் - ஜாபர் சாதிக் தலைமறைவு!

12:43 PM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய  ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.

Advertisement

டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.  கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை செய்ததில் சுமார் 1,700 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.  இதன் தொடர்ச்சியாக டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதைப் பொருளை கடத்த முயன்ற 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இதையும் படியுங்கள் : சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’

இதையடுத்து போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான மூன்று பேரை விசாரணை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரும்,  திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்,  கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால்,  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நேற்று நீக்கப்பட்டார்.

இதனிடையே,  ஜாபர் சாதிக்கின் சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் ஒட்டினர்.  இதில், டெல்லியில் சிக்கிய போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதால் விசாரணைக்கு  இன்று (பிப் - 26) காலை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் நகலை ஒட்டிச் சென்றுள்ளனர்.  ஆனால், ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.  இவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
arrestedCentral Narcotics Control UnitDMKDrug trafficking caseDrugsJaffer SadiqSummons
Advertisement
Next Article