Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#manipur-ல் 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு!

04:16 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் அண்மையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மொய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.

இதையடுத்து, ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அசாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன் - எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்!

இந்நிலையில், மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருவதால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் இன்று (செப். 10) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் இன்று (செப். 10) அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதால் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் 3 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல செயல்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Drone attackNews7Tamilnews7TamilUpdatesreverberation
Advertisement
Next Article