Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

10:17 AM Feb 13, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி விவகாரத்தில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டு எழுந்தது.  2022-ம் ஆண்டில் இந்த வழக்கில் அப்துல்லா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், 86 வயதான பரூக் அப்துல்லா மீது பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த மாதம் 11-ம் தேதியன்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.12) புதிதாக சம்மன் அனுப்பப்பட்டது. அதில் அவர் இன்று (பிப்.13) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து, தற்போது ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பரூக் அப்துல்லாவும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
EDfarooq abdullahJammu KahmirJK Cricket Association ScamNews7Tamilnews7TamilUpdatessummon
Advertisement
Next Article