Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் திரௌபதி முர்மு!

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
04:02 PM Jul 13, 2025 IST | Web Editor
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
Advertisement

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

Advertisement

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரடியாக நியமிப்பார். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்துள்ளார். அதன்படி,

உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்.

இந்த நியமனங்கள் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
appointedDelhidraupadi murmuMPspresidentmurmuPresidentofIndiaRajya Sabha nominated
Advertisement
Next Article