Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“‘காவல் உதவி’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்” - மாணவிகளுக்கு அமைச்சர் கோவி செழியன் அட்வைஸ்!

09:42 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

மாணவிகள் அனைவரும் ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் மாணவிகளுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

“பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும், குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை, அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
DMKGovi ChezhiaanHigher Education Ministerstudents
Advertisement
Next Article