CSK மற்றும் IPL ரசிகர்களுக்கு இன்று டபுள் டமாகா கொண்டாட்டம் - ரசிகர்களுக்கு அட்டகாசமான டி20 விருந்து!
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்.7) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும், ரஜத் படிதார் 64 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி பிற்பகல் 3:30 மணி அளவில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
இதேபோல மாலை 7:30 மணிக்கு சண்டிகரில் பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. 4அணி வீரர்களும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் இன்று ஒரேநாளில் இரண்டு போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.