Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சொத்துக்காக மாமியார் மற்றும் நாத்தனாரை கொலை செய்த மருமகள் உட்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

09:23 PM Nov 05, 2024 IST | Web Editor
Advertisement

சொத்துக்காக மாமியார் மற்றும் நாத்தனாரை கொலை செய்த மருமகள் உட்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை அருகே வி.லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்
அழகன் - அழகி தம்பதி. இவர்களுக்கு மணிமுத்து என்ற மகனும், அடைக்கம்மை என்ற மகளும்
உள்ளனர். இதில் அழகன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அழகி மட்டும் தனியாக வசித்து
வந்துள்ளார். இந்த நிலையில் தனது பெயரில் இருந்த வீட்டை தனது மகள் அடைக்கமைக்கு எழுதிக் கொடுக்க அழகி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அழகியின் மருமகள் சுப்பம்மாள், வீட்டு இடத்தை தனக்கு எழுதி தகராறு
செய்து வந்துள்ளார். இதையடுத்து சுப்பம்மாள் கடந்த 4/05/2014 அன்று திட்டமிட்டு, தனது மகன்கள் பாண்டியராஜன், வெள்ளைச்சாமி மற்றும் உறவினர் பாண்டி ஆகியோருடன் சேர்ந்து அழகி மற்றும் அடைக்கம்மையை கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு பனையபட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை முழுமையாக நிறைவு பெற்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சொத்துக்காக மாமியார் மற்றும் நாத்தனாரை கொலை செய்த மருமகள் உட்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
CrimeDouble Life ImprisonmentPudukkottai District Court
Advertisement
Next Article