Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஓட்டுப் போட்டேன்ல... பொண்ணு பாருங்க”... எம்எல்ஏவிடம் வம்பு இழுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

02:18 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

எம்எல்ஏவிடம் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பெண் பார்க்க சொல்லி கோரிக்கை விடுத்த வினோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ பிரஜ்பூஷன் ராஜ்புத் சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவரிடம் தனக்கு மணப்பெண் பார்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஊழியரின் கோரிக்கையால் திகைப்படைந்த சர்க்காரி தொகுதி எம்எல்ஏ வாய்யடைத்து நின்றார்.

“சமீபத்திய தேர்தலில் நான் உங்களுக்கு வாக்களித்தேன். உங்கள் வெற்றியில் எனக்கும் பங்கு உள்ளது. என் திருமணத்திற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்கு பெண் பார்க்க வேண்டும். எனக்கு மாத சம்பளம் ரூ.6000. எனக்கு கொஞ்சம் நிலமும் உள்ளது” என 44 வயதான அகிலேந்திர கரே என்ற ஊழியர் எம்எல்ஏவிடம் கூறியுள்ளார்.

“நீங்கள் மிகவும் வசதியாக இருக்கிறீர்கள். விரைவில் உங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்” என எம்எல்ஏவும் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
MarriageMLAuttar pradesh
Advertisement
Next Article