For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிறமொழிகளில் அனுப்பும் #VoiceNotes புரியவில்லையா? இனி கவலையில்லை - WhatsAppன் புதிய அப்டேட்!

09:03 PM Aug 22, 2024 IST | Web Editor
பிறமொழிகளில் அனுப்பும்  voicenotes புரியவில்லையா  இனி கவலையில்லை   whatsappன் புதிய அப்டேட்
Advertisement

பிறமொழிகளில் அனுப்பப்படும் வாய்ஸ் நோட்ஸ்களை புரிந்து கொள்ளும் விதமாக புதிய அப்டேட்டை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல அந்நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் மெட்டா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஒரு செய்தியை டெலீட் (delete) செய்தால் அதை திரும்ப பெறும் (undo) வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்னதாக அறிமுகப்படுத்தியது.  அதேபோல் நாம் தவறுதலாக அனுப்பிய செய்தியை நீக்க, டெலிட் ஃபார் எவ்ரி ஒன் (delete for everyone) என்பதற்கு பதிலாக டெலிட் ஃபார் மீ (delete for me) என்பதை கொடுத்துவிட்டால்,  அந்த செய்தி நமது வாட்ஸ் ஆப் சேட்டிலிருந்து நீங்கிவிடுமே தவிர செய்தியை பெற்றவர்கள் அதனை பார்க்க முடியும்.

இந்தப் பிரச்னையை போக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த மே மாதம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. ஒரு செய்தியை டெலிட் ஃபார் மீ (delete for me) என்று கொடுத்துவிட்ட அடுத்த 5 வினாடி வரை அன்டூ (undo) பாப் அப்பில் தெரியும்.  5 வினாடிக்குள் அன்டூ (undo) செய்துவிட்டால் அந்தச் செய்தியை நாம் சாட் பாக்ஸில் திரும்பப் பெறலாம். பிறகு அதனை டெலீட்ஃபார் எவ்ரி ஒன் வசதி மூலம் யாரும் பார்க்காத வகையில் நீக்கி விடலாம்.

இதேபோல சமீபத்தில் மெட்டா  தனது ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மற்ற ஜெனரேஷன் ஏஐ சாட்பாட்களை போலவே இதிலும் பயனர்கள் பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ளலாம். இது மெட்டாவின் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் போன்ற தளங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயனர்கள் இதைக் கொண்டு மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF உருவாக்க என பல பணிகளை செய்யலாம். இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தபடி மேற்கொள்ளலாம். கூகுள், மைக்ரோசாஃப்ட் வழங்கும் நிகழ்நேர சேர்ச் ரிசல்ட்களை பயனர்கள் இதில் பெற முடியும்.

இந்த நிலையில் தற்போது அசத்தலான அப்டேட்டை  வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. அதன்படி  வாட்ஸ் அப்-ல் Voice Note Transcription என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆங்கிலம், இந்தி மொழியில் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பும் குறுஞ்செய்திகளை, அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றி (Transcript) டெக்ஸ்ட் மெசேஜ் ஆக அனுப்பும் முடியும்.  இதற்கான அப்டேட்டை முதற்கட்டமாக ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கு வழங்க வாட்சப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement