”சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்” - அண்ணாமலை பேச்சு..!
மதுரையில் அண்ணாநகரில் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" தொடக்க விழா நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலையோட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.
இவ்விழாவில் மத்திய இணைச் அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஏ.சி.சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா. நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணத்திற்க்கான பாடலை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்,
இதனை தொடர்ந்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியது,
”பாஜக - அதிமுக கூட்டணி கணக்கு வெற்றியடையும். புயல், மழை, பனி எதுவானலும் அடுத்த 4 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் காசை கொடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற இருமாப்புடன் உள்ளார். தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளில் 88 பேர் கள்ளச்சாராயம் சாவில் உயிரிழந்துள்ளனர்.
கரூரில் உயிரிழந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள், கரூரில் 100 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி உயிரிப்பில் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, இன்பநிதி சினிமாவில் நடிப்பது, உதயநிதி நாயோடு போட்டோ போடுவது என மாறி உள்ளது.
2026 ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கட்டிலில் அமர வைக்க மோடி முடிவெடுத்து விட்டார்கள். சினிமாவை பார்க்க போகிறார்கள் விசில் அடித்து ரசிக்க வேண்டும். சினிமாவில் நடிப்பவர்கள் தமிழகத்தை நன்றாக ஆளுவார்கள் என நினைக்க வேண்டாம்.
வம்பு சண்டை போடுவதற்காக திமுக டெல்லிக்கு செல்கிறார். ஆய்வுக் கூட்டம் நடத்த தெரியாத முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார்” என்றார்.