மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க... ஏப்ரல்க்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5000 வரை சிறப்பு சலுகை - மதுரை மாநகராட்சி அறிவிப்பு!
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை எப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 % சதவீதம் சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது.
08:02 PM Apr 04, 2025 IST | Web Editor
Advertisement
2025-2026-ம் ஆண்டுக்கான சொத்து வரியினை எதிர்வரும் 30.04.2025 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சதவீதம் சிறப்பு சலுகை (அதிகபட்சமாக ரூ.5000) வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Advertisement
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 30.04.2025-க்குள் தங்களது சொத்து வரியினை செலுத்தி பயன்பெறுமாறும் மதுரை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வரிகளை செலுத்துவதற்கு வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.