For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

 “சாதியை தெரிந்து கொள்ள வேண்டாம்” - மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அட்வைஸ்.!

08:52 AM Jan 21, 2024 IST | Web Editor
 “சாதியை தெரிந்து கொள்ள வேண்டாம்”   மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அட்வைஸ்
Advertisement

 “சாதி என்பதே கிடையாது, மாணவர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டாம்” என தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 

Advertisement

விழுப்புரத்தில் செயல்படும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா ஒன்றில் நகைச்சுவை
நடிகர் சதீஷ் நேற்று கலந்து கொண்டார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டு
களித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசினை வழங்கினார். அதனை தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சதீஷ்,

பள்ளி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் திரும்பவும் கிடைக்காத ஒன்று. அதனை நல்லபடியாக ஒழுக்கமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். உறவினர்கள் வீட்டிலேயே கிடைப்பார்கள். எதிரிகள் எங்கு வேண்டுமானாலும் கிடைப்பார்கள். உண்மையான நட்பு என்பது பள்ளி கூட வாழ்க்கையில் தான் கிடைக்கும். பள்ளி கூட வாழ்க்கையில் நண்பர்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள விருப்பபடும் நாம் நண்பர்களின் சாதியை தெரிந்து கொள்ள விரும்பவதில்லை.

அதனை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். சாதி என்பதே கிடையாது. பள்ளிக்கூட வாழ்க்கையிலிருந்து இதுவரை நான் புகைபிடித்தது, மதுப்பழக்கம் போன்றவற்றில்
ஈடுபட்டது கிடையாது. நீங்களும் புகை பிடிப்பது, மது பழக்கம் போன்றவற்றை கற்று கொள்ள கூடாது. அது உடலுக்கு தான் கேடு விளைவிக்கும். பணம் தான் வீணடிக்கப்படுகிறது. பள்ளி வாழ்க்கையில் வகுப்புகளுக்கு கட் அடிப்பது, பிட் அடிப்பது போன்ற சிறு சிறு தவறுகள் கூட செய்யலாம். ஆனால், காதல் மட்டும் செய்யவே கூடாது.

அப்படி காதல் மட்டும் வந்துவிட்டது என்றால் நம் வாழ்க்கை, நேரம் எதுவும்
நம்மிடம் இருக்காது. அந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம். மாணவர்கள் பள்ளி படிப்பினை முடித்து வளர்ந்தபின் எதிர்காலத்தில் பெற்றோர்களை தனி குடித்தனம் வைக்க கூடாது. மாணவர்களை பெற்றோர் மற்றவர்களிடம் ஒப்பிட்டு பேச கூடாது என நடிகர் சதீஷ் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Tags :
Advertisement