Lady Super Star என அழைக்க வேண்டாம் - கமல், அஜித் வரிசையில் நயன்தாரா அறிவிப்பு!
இது தொடர்பாக திரைப்பட நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..
” என் அன்பு ரசிகர்கள், மதிப்பிற்குரிய ஊடக நண்பர்கள் மற்றும் திரைப்படக் குடும்பத்தினருக்கு, வணக்கம்.
நான் ஒரு நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்பதற்கான என் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும்.
நீங்கள் பலரும் எனக்கு "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை "நயன்தாரா" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.
நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதை கொண்டு வந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும்.
சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது - அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்!” என குறிப்பிட்டுள்ளார்.