பிரச்சாரத்தின் போது இந்திய தம்பதியுடன் உரையாடிய #DonaldTrump!
மெக் டொனால்டு கடையில் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் தயாரித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், புலம்பெயர்ந்த இந்திய தம்பதிக்கு டெலிவரி செய்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு தேர்தல் பிரச்சார களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்திற்காக பென்சில்வேனியா சென்ற ட்ரம்ப், அங்கிருந்த மெக் டொனால்ட் கடைக்குள் நுழைந்தார். அங்கு ‘ ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்’ செய்து வாடிக்கையாள்ரகளுக்கு வழங்கினார். அப்போது அங்கு உணவு வாங்க சென்ற இந்திய தம்பதிகள் டிரம்பை பார்த்து ஆச்சரியத்தில் உரைந்தனர். தொடர்ந்து அவருடன் உரையாடிய அவர்கள், எங்களைப் போன்ற சாதாரண மக்கள் இங்கு இருப்பதை நீங்கள் சாத்தியமாக்கினீர்கள். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
காரில் உடன் அமர்ந்திருந்த அவரின் மனைவி, எங்களுக்காக குண்டு காயம் வாங்கியதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.