For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்” - உக்ரைன் அதிபரை எச்சரித்த டிரம்ப்!

மக்கள் உயிர்களுடன் விளையாடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் எச்சரித்த டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
09:38 AM Mar 01, 2025 IST | Web Editor
“மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்”   உக்ரைன் அதிபரை எச்சரித்த டிரம்ப்
Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

Advertisement

இதில் போரின்போது நிதி மற்றும் ஆயுதம் வழங்கியதற்கு  உக்ரைனின் அரிய கனிமங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பேச்சு வார்த்தையின்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  நன்றியுள்ளவராக இல்லை என்று இருவரும் குற்றம் சாட்டினர். மேலும் ஜெலன்ஸ்கி   “அவமரியாதை” செய்கிறார் என்று துணை அதிபர் தாக்கிப் பேசினார். தொடர்ந்து ஜெலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப்,  “நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். இந்த கடுமையான பேச்சு வார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியேறினர்.

தொடந்து பேச்சு வார்த்தை குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் மிகவும் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தினோம் என்றும் அமெரிக்கா ஈடுபட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை என்று  தீர்மானித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைன் அதிபர் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம் என்று கூறினார்.

இதையடுத்து உக்ரைன் அதிபர் தனது எக்ஸ் பதிவில்,  “அமெரிக்க அளித்த ஆதரவுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் நன்றி, உக்ரைக்குக்கு நிரந்தர அமைதி தேவை, அதற்காக பாடுபடுவோம்” என்று கூறியிருந்தார்.

Tags :
Advertisement