Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் - பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08:20 AM Jan 21, 2025 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவின் 47-வது அதிபராக நேற்று டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், "அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள்.

இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத் தை வடிவமைக்கும் வகையிலும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Donald trumpInaugurationNarendra modiPresidentprime ministerUnited State
Advertisement
Next Article