Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் ‘டொனால்ட் ட்ரம்ப்’ - டைம் இதழ்!

12:31 PM Dec 13, 2024 IST | Web Editor
Advertisement

இந்தாண்டின் சிறந்த மனிதராக, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகி உள்ளார்.

Advertisement

அமெரிக்க ஆங்கில வார நாளிதழான ‘டைம்’, ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிக செல்வாக்கு பெரும் நபரை தேர்வு செய்து, டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகிறது.

இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி, மிகச்சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுக்கும். அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2016 ஆம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Donald trumpPerson of the YearTime MagazineUS
Advertisement
Next Article