அமெரிக்காவில் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கிய ட்ரம்ப்: துணை அதிபர் வேட்பாளரையும் அறிவித்தார்!
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ட்ரம்ப், மீண்டும் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். மேலும் துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சியை அவர் இன்று அறிவித்தார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் போட்டியிடுவார் என்று டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஓஹியோவை சேர்ந்த ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் "ஹில்பில்லி எலிகி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள் : நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!
முன்னதாக, பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் நேற்று முன்தினம் ட்ரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ட்ரம்பின் வலது காதில் ஏற்பட்ட காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர், ட்ரம்பை சுட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
அவர் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரை சேர்ந்த தாமஸ் மேத்யூ என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒஹியோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப், ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.