"விரைவில் அடுத்தகட்ட பயணம்"... வைரலாகும் #RahulGandhi-ன் வீடியோ!
ஒற்றுமை நடைப்பயணத்தின் போது தற்காப்புக் கலைஞர்களுடன் பயிற்சி செய்த வீடியோவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023 ஜனவரி வரை ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் ஈடுபட்டார். தேசிய விளையாட்டு தினம் இன்று (ஆக.29) கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், ஒற்றுமை நடைப்பயணத்தின்போது தற்காப்புக் கலைஞர்களுடன் பயிற்சி செய்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவுடன் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளதாவது,
"ஒற்றுமை நீதிப் பயணத்தின்போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டி இருந்த நிலையில், தினமும் மாலை நாங்கள் தங்கும் முகாமில் ஜப்பானியர்களின் தற்காப்புக் கலையான ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்தோம்.
நாங்கள் தங்கியிருந்த நகரங்களைச் சேர்ந்த இளம் தற்காப்புக் கலைஞர்கள் எங்களுக்கு உதவினர். மேலும் தியானம், ஜியு-ஜிங்ட்சு, ஜகிடோ ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதும், வன்முறையை மென்மையாக மாற்ற மென்மையான கலை மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. 'டோஜோ யாத்திரை' விரைவில் தொடங்க உள்ளது."
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.