எங்க ஏரியா உள்ள வராதே... 2 சிங்கங்களை விரட்டிய வளர்ப்பு நாய்கள் - இணையத்தில் #VideoViral!
குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கங்களை வளர்ப்பு நாய்கள் விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளது. 2020 கணக்கெடுப்பின்படி அங்கு சுமார் 674 சிங்கங்கள் வசிப்பதாக ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சிங்கங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இதனால் சில நேரங்களில் மனிதர்களை சிங்கங்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தோர்டி கிராமத்திற்குள் புகுந்த இரு சிங்கங்கள் அந்த வீட்டு நாய்களால் துரத்தப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ பதிவில் தோர்பி கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் இரண்டு சிங்கங்கள் சாலையில் உலா வந்து ஒரு வீட்டின் கேட் அருகே நிற்கின்றன. அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த நாய் பயப்படாமல் சிங்கத்தை எதிர்கொண்டது.
இதையும் படியுங்கள் : #UGCNET Exam : முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தோ்வுகள் முகமை!
இரு சிங்கங்களும் அங்கும் இங்கும் நடக்க மற்றொரு நாயும் அங்கு வந்து சிங்கங்களை பார்த்து பயங்கர சத்தத்துடன் குரைத்தது. அப்போது அங்கு வந்த மற்றொரு சிங்கம் கேட்டில் ஓங்கி அறைந்து நாய்களை தாக்க முயன்றது. அந்த இரு நாய்களும் தொடர்ந்து குரைத்தது.
இதையடுத்து, இரு சிங்கங்களும் அருகில் இருந்த புதருக்குள் ஓடி மறைந்து விட்டன. பின்னர் நாய் ஒன்று வெளியில் வந்து குரைத்து சிங்கங்களை துரத்தி அடித்தது. காலையில் கேட் தாக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதன் பிறகு சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அவர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ இணைய தளங்களில் பரவி வருகிறது.