For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கடித்துக் குதறிய நாய்: 2.5 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

09:58 AM May 31, 2024 IST | Web Editor
கடித்துக் குதறிய நாய்  2 5 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
Advertisement

சென்னையில் இரண்டரை வயது குழந்தையை  நாய் கடித்து குதறியதில் கன்னத்தில் காயமடைந்த நிலையில்,  அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.  

Advertisement

சென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர்
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாண்டி.   இவர் அண்ணா நகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.   இவருடைய மனைவி பிரதீபா.  இவர்களுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர்.   இந்த நிலையில்,  கடந்த திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் தங்கபாண்டியின் மகள் இரண்டரை வயதான யாஷிகா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையில் சுற்றித் திரிந்து நாய் ஒன்று சிறுமியின் மேல் தாவி ஒரு பக்க கன்னத்தில் கடித்து குதறியது.  சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவருடைய தாய் பிரதீபா,  சுமார் 20 நிமிடம் போராடி நாயிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளார்.  தொடர்ந்து,  அருகில் உள்ள குடியிருப்புவாசிகளின் உதவியோடு
சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


இதனையடுத்து,  குழந்தைக்கு கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து,  சிறுமியின் தந்தை தங்கப்பாண்டி பேசும்போது,  "பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே,  சாலையில் சுற்றி திரியக்கூடிய நாய்களை மாநகாட்சி அதிகாரிகள் ஊழியர்களை வைத்து பிடித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
Advertisement