இந்த காலணியின் விலை ரூ.1 லட்சமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்தியாவில் ரூ.100-க்கு விற்கப்படும், சாதாரண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரப்பர் செருப்புகள், சௌதி அரேபியாவில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் ரப்பர் செப்பலை நாம் பொதுவாக குளியலறையில் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இந்த செருப்பின் விலை ரூ.100 என்ற அளவிலே இருக்கும். இதனால் சாதாரண மக்களும் இந்த செருப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சௌதி அரேபியாவில் ஹவாய் செருப்புகள் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சௌதி அரேபியாவில் இந்த செருப்புகள் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகி வைரலாகி வரும் வீடியோவில் கையுறை அணிந்த கடையின் ஊழியர் ஒருவர் ஒரு ஜோடி காலணிகளை வெளியே எடுத்து கண்ணாடி மேசையில் வைத்து வாடிக்கையாளருக்குக் காட்டினார். இதன் விலை 4,500 ரியால்கள் என்று கூறப்படுகிறது, அதாவது இது இந்திய மதிப்பில் ரூ. 1,00,305 ஆகும்.
ஊழியர் இந்த செருப்பினுடைய சிறப்பு அம்சங்களை, வாங்குபவருக்கு எடுத்துக்காட்டுவதைக் காண முடிந்தது. இந்த ரப்பர் மிகவும் மென்மையாக இருக்கும் உங்கள் காலில் போடும் போது நன்றாக இருக்கும் என்று கூறுகிறார். இருப்பினும், இந்த விலைக்கு இந்த செருப்பா? என நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ரிஷி பாக்ரீ என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
We Indians use these sandals as a toilet footwear 😀 pic.twitter.com/7EtWY27tDT
— Rishi Bagree (@rishibagree) July 16, 2024