Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உடல் உறுப்பு மாற்று சட்டம் செயல்படுகின்றனவா..? - மத்திய , மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

08:34 AM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

அனைத்து அரசு மருத்துவமனைகளும் உடல் உறுப்பு மாற்று சட்டத்தின் கீழ் நடக்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது

Advertisement

உடல் உறுப்பு மாற்று சட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகள் செயல்பட உத்தரவிட கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனை கல்லூரிகள் மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் மனித உடல் உறுப்பு மாற்று சட்டம் 2011 பிரிவு 14 மற்றும் 14ஏ ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றவும் தேசிய உறுப்பு மற்றும் திசுமாற்று அமைப்பில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் ஒரு ஆண்டிற்கு கிட்டத்தட்ட 1.6 லட்சம் சாலை விபத்து மரணங்கள் ஏற்படும் நிலையில் அதில் 60% தலை காயம் ஏற்படுவதால் தான் உண்டாகிறது எனவே அரசு மருத்துவமனைகளில் இந்த உடல் உறுப்பு மாற்று சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படுவதுடன் பல உடல் உறுப்பு தானங்களும் மேற்கொள்ளப்படும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு  நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தபோது  மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து. இதனைத் தொடர்ந்து  வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags :
body transplantState GovtSupreme courttransplantunion govt
Advertisement
Next Article