Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு சொந்தமா”? - மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி!

06:35 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு சொந்தமா? என மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:

“பிரதமர் மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை பல வழிகளில் வஞ்சித்து இருக்கிறது. தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்கி விட்டதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எந்த பணியும் நடக்காமல் தேர்தல் வந்த உடன் பணி நடப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. பிரதமர் மோடியை பொருத்தமட்டில் தன்னுடைய தோல்விகளை பற்றி சொல்லாமல், தாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறோம் என்பதை பற்றி சொல்லாமல் மற்ற அரசியல் தலைவர்களை தாழ்த்தி பேசுவது என்பது அவருடைய பழக்கமாகிவிட்டது. இதனை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. பாஜகவை பொருத்தமட்டில் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட வெற்றி பெறப்போவதில்லை. மோடியின் பொய் பிரச்சாரம் தமிழ்நாட்டில் வீழும்.

தமிழ்நாட்டில் மிக முக்கிய பிரச்சனையாக போதை பொருள் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்காக அனைவருமே எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறோம். பாஜகவை பொருத்தமட்டில் திமுக மேல் பழி சுமத்த நினைப்பது எவ்வளவு தூரம் நியாயம் ஆக இருக்கும் என்பது தெரியவில்லை. குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் குஜராத் முதலமைச்சருக்கு சொந்தமா? அமித்ஷாக்கு சொந்தமா? அல்லது பிரதமர் மோடிக்கு சொந்தமா? என்ற விளக்கத்தை கொடுக்க வேண்டும். பாஜகவை பொருத்தவரை தொடர்ந்து இப்படி பொய் பிரச்சாரம் செய்வதில் மிகவும் வல்லவர்கள். தமிழ்நாட்டை பொருத்தவரையில் போதை பொருள் கடத்தல் சம்பந்தமான ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கட்சியையும் அதன் கூட்டணி கட்சிகளையும் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்?

பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதால் எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. அவர் அடிக்கடி வரவேண்டும் என்று எண்ணுகிறோம். மோடி தமிழ்நாட்டில் இந்தியில் பேசுவது என்பது எந்த பிரதமரும் இதுவரை செய்யாத ஒன்று. பாஜகவை பொருத்தமட்டில் வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில் இருந்து பிரச்சனைகள் இருக்கிறது.  இந்தியா கூட்டணியை பொருத்தமட்டில் தேர்தல் அறிவித்தவுடன் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.  காங்கிரஸின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் 7ம் தேதி அல்லது 8ம்தேதி
வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் மத்திய குழு தமிழ்நாட்டில் முதல் முறையாக பேசி விட்டு சென்று இருக்கிறார்கள். 2வது முறையாக வந்து பேசி
இறுதி செய்வார்கள். காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு மற்ற மாநிலங்களில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதால், விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்வார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தமட்டில் தங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெற்றிருக்கிறது. மோடி அரசினுடைய பத்தாண்டு கால தோல்விகள், மோடி அரசு ஐந்தாண்டு காலம் விருதுநகருக்கு செய்வதாக வாக்கு கொடுத்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வோம் என்பதை பற்றி சொல்வோம்.  தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை மற்றும் நான் முதல்வர் திட்டம் என்று பல புதுமையான திட்டங்களை செய்திருக்கிறார்கள். அதனை சொல்லி மக்களிடம் நியாயமான வாக்கு கேட்போம்” என தெரிவித்துள்ளார்.

Tags :
CongressDMKDrugsElection2024IndiaManickam tagore MPmodiParlimentary Election
Advertisement
Next Article