"சீன நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு செய்து வருகிறார் என பிரதமர் மோடிக்கு தெரியுமா?" - #Congress கேள்வி!
செபி தலைவர் மாதவி புரி புச், சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதாக, அதானி குழுமம் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் செபி தலைவர் மாதவி புரி புச் பற்றி, புதிய பல முரண்பட்ட தகவல்கள் இன்று காலை வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்னவென்றால், செபி தலைவர், பட்டியலிப்படாத விலை கவனம்பெறத்தக்க தகவல்களை வைத்திருக்கும் நிலையில், பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் வணிகம் செய்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : #Mahavishnu -க்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!
மாதவி புரி புச் இந்தியாவிற்கு வெளியே அதிக மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளார். இந்திய நாட்டுடன், சீனா எல்லைப் பகுதிகளில் மோதல் போக்கை உருவாக்கி நாட்டின் எல்லையில் பதற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், செபி தலைவரோ, சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த தகவல்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா?"
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.