For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“60 வயது நபருக்கு 25 வயது தோற்றம் வேணுமா? எங்களிடம் டைம் மிஷின் இருக்கு!” மோசடி செய்து ரூ.35 கோடியை சுருட்டிய #UttarPradesh தம்பதி!

05:44 PM Oct 04, 2024 IST | Web Editor
“60 வயது நபருக்கு 25 வயது தோற்றம் வேணுமா  எங்களிடம் டைம் மிஷின் இருக்கு ” மோசடி செய்து ரூ 35 கோடியை சுருட்டிய  uttarpradesh தம்பதி
Advertisement

60 வயது நபருக்கு 25 வயது தோற்றம் தரும் டைம் மிஷின் தங்களிடம் இருப்பதாக கூறி உத்தரப்பிரதேசத்தில் விநோத மோசடியை ஒரு கணவன் மனைவி அரங்கேற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

Advertisement

விநோதமான மோசடிகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் இருந்தாலும், மக்கள் தொடர்ந்து ஏமாறுவதால் ஏமாற்றுபவர்கள் புதிது புதிதாக துளிர்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். குறிப்பாக மக்களின் பேராசையே அவர்களை பேரிழப்புக்கு ஆளாக்குகிறது. இப்படி மக்களின் பேராசையை பயன்படுத்தி விநோதமான வகையில் மக்களை ஏமாற்றிய நிகழ்வொன்று தான் உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்தேரியுள்ளது.

ராஜீவ் துபே மற்றும் ரஷ்மி துபே ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தம்பதி. இவர்கள் தங்களிடம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைம் மிஷின் இருப்பதாகவும் இதன் வாயிலாக 60 வயதுடையோர் கூட 25 வயது இளம் தோற்றத்தை பெற முடியும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். இவர்கள் இதற்காக கித்வாய் நகரில் சிகிச்சை மையம் ஒன்றையும் திறந்துள்ளனர். அதோடு இளமை தோற்றம் நிலைத்திருக்க ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படும் எனக்கூறி, அவர்கள் இளைஞர்களையும் குறிவைத்து நம்ப வைத்துள்ளனர்.

காற்றுமாசுபாடு காரணமாகவே அப்பகுதி மக்கள் விரைவாக முதுமையடைவதாகவும், ஆக்ஸிஜன் சிகிச்சை வாயிலாக இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். இதற்காக ஸ்பெஷல் பேக்கேஜுகளை அறிவித்த அந்த மோசடி தம்பதி, 90,000 ரூபாய்க்கு 3 வருடம் சிகிச்சையும், ஆலோசனையும் பெற முடியும் என கூறியிருக்கின்றனர்.

இதனை நம்பி பல முதியவர்கள் தாங்கள் இளமை தோற்றத்த பெறலாம் என ஆசைப்பட்டு பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கின்றனர். இதே போன்று இளம் வயதினரும் ஆக்ஸிஜன் சிகிச்சை வாயிலாக தாங்கள் எப்போதும் இளமையாகவே இருக்கலாம் என நம்பி பணம் கொடுத்துள்ளனர். இப்படியாக சுமார் 20 பேருக்கு மேல் ராஜீவ் துபே மற்றும் ரஷ்மி துபே தம்பதியிடம் அகப்பட்டிருக்கின்றனர்.

நாட்கள் ஆகஆக இத்தம்பதியிடம் சிக்கியவர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதில் ரேணு சிங் என்பவர் காவல்துறையை நாடியிருக்கிறார். அவர், தான் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் இதுவரை இந்த மோசடி தம்பதி டைம் மிஷின் தந்திரத்தை பயன்படுத்தி 35 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் அபகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கிடையில் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அந்த மோசடி தம்பதி தலைமறைவாகியுள்ளது.இது தொடர்பாக கோவிந்த்நகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க ரெட் கார்னர் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

மோசடிகளின் தொடக்கமே ஆசையை தூண்டுவதுதான். இதை தான் சதுரங்கவேட்டை திரைப்படத்தில் கதாநாயகன் பேசுவது போல் ஒரு வசனம் வைத்திருப்பார் அத்திரைப்படத்தின் இயக்குநர் எச்.விநோத்.

“ஒருத்தரை ஏமாத்தனும்னா மொதல்ல அவங்க ஆசைய தூண்டனும்” இது தான் அந்த வசனம். இந்த சாராம்சத்தை தான் ஒவ்வொரு மோசடி கும்பலும் தங்கள் தாரக மந்திரமா காலாகாலமாக கையாண்டு வருகிறது. இதனால சுதாரிப்பா இருக்கதுதான் நமக்கு நல்லது...

Tags :
Advertisement