"அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும்" - மருத்துவர்கள் கோரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாட்டில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அரசு சாா்பில் சென்னை, மதுரையில் தலா ஒரு மருந்தியல் கல்லூரிகள், 6 செவிலியா் கல்லூரிகள் என 14 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. அங்கு மொத்தம் 608 இடங்கள் உள்ளன. ஆனால், தனியாா் வசம் 391 துணை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு 21,190 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், அரசு கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் துணை மருத்துவ படிப்புகளான பி.பாா்ம், பிஎஸ்சி நா்சிங் உள்ளிட்ட படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை பெரும்பாலும் தனியாா் நிா்வாகிகளே நடத்துகின்றனா். துணை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்தமுள்ள இடங்களில் 97% தனியாரிடம் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.