For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

17கிலோ எடையுடன் நடக்க முடியாமல் திணறிய பூனை - Strict Diet ஐ பரிந்துரைத்த #Doctor

08:11 PM Sep 10, 2024 IST | Web Editor
17கிலோ எடையுடன் நடக்க முடியாமல் திணறிய பூனை   strict diet ஐ பரிந்துரைத்த  doctor
Advertisement

17கிலோ எடையுடன் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு கடுமையான டயட் திட்டத்தை மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இது எங்கே நடந்தது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் அடித்தளத்தில் கடந்த வாரம் பிறந்து 2வயதான குழந்தையின் எடையை விட அதிக எடை கொண்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பூனையின் பெயர் குரோஷிக்ன் என்பதாகும். விலங்கு நல ஆர்வலர்களால் இந்த பூனை மீட்கப்பட்டுள்ளது. இதன் எடை 17 கிலோகிராம் இருந்ததால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

பூனை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்டபோது அது நடக்க கூட முடியாத அளவுக்கு உடல் முழுக்க சதை போடப்பட்டு பருத்து காணப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள மெட்ரோஸ்கின் எனப்படும் விலங்கு நல மையத்தில் பூனை சேர்க்கப்பட்டது. பூனைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அதனுடைய எடை குறைப்பில் கவனம் செலுத்த துவங்கினர்.

கிரோஷிக் என அழைக்கப்படும் இந்த பூனையானது ரொட்டி துண்டுகள், சூப், விஸ்கி மற்றும் இறைச்சி ஆகியவற்றை தொடர்ச்சியாக அதிக அளவில் உட்கொண்டதால் அதன் எடை அதிகரித்தது. பூனைக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அதற்கு கடுமையான டயட் திட்டத்தை பரிந்துரைந்துள்ளனர்.

இதன் பின்னர் ஓரளவுக்கு எடை குறைந்தால்தான் பூனையால் நடக்கு முடியும் தெரிவித்துள்ளனர். இந்த பூனையானது உலகின் முதல் 5 கொழுத்த பூனைகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. கொழுத்த கிரோஷின் பூனையின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

Advertisement