Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் தெரியுமா? - வெளியான புதிய தகவல்!

09:19 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது. அதன்பின் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர விரும்பாததால், அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் காட்டவில்லை. இதனால் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதாக தகவலகள் வெளியானது. குறிப்பாக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங், உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கவுதம் கம்பீர் உடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்ட 2 ஆண்டுகளும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் அந்த அணியை மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BCCIgautam gambhirhead coachIndiaRahul dravidteam
Advertisement
Next Article