For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லி? கதாநாயகி இவரா? - லேட்டஸ்ட் அப்டேட்!

08:58 AM Apr 02, 2024 IST | Web Editor
அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லி  கதாநாயகி இவரா    லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

இயக்குநர் அட்லி - நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் அட்லி நடிகர் விஜயுடன் இணைந்து அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். இதையடுத்து, ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' திரைப்படத்தை இயக்கினார். 'ஜவான்' திரைப்படத்திற்கு பின்னர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குநராக மாறினார்.

இதையும் படியுங்கள் : “கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!

'ஜவான்' திரைப்படம் சுமார் ரூ.1140 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து, ரூ. 3000 கோடி வசூல் செய்யும் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படம் எடுக்கப்போவதாகவும் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அட்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிரூத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தெலுங்கு திரைவட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல, அட்லியின் தெறி, மெர்சல் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகை சமந்தா, இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

Tags :
Advertisement