பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன் நடந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.
இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக்ஜம் புயலின் காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க இயலாததால், சென்ற வார எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது. அதன்படி, வைல்டு கார்டில் இரண்டாவது முறையாக பிக் பிக் நிகழ்ச்சிக்கு வந்த அனன்யா ராவ் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.