பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் யார் தெரியுமா?..
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகிய மூன்று பேரும் நாமினேசன் செய்யப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகளை பெற்ற விக்ரம் வெளியேற்றப்பட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். பின் வைல்கார்ட் என்ட்ரியாக 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டனர். குறைந்த வாக்குகளை பெறுபவர் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவர். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கிவரும் நிலையில், முக்கிய போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வருகின்றனர்.
பிக்பாஸ் 7 போட்டியின் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டவர் சரவண விக்ரம். போட்டியின் முதல் வாரத்தில் கொஞ்சம் ஆர்வமாக அனைத்திலும் பங்கேற்ற இவர், அடுத்த வாரத்தில் கேப்டன் ஆனார். ஆனால் தொடரும் வாரங்களில் சரவண விக்ரமின் ஆர்வம் குறைந்தது.
இந்நிலையில், இந்த வாரம் விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகிய மூன்று பேரும் நாமினேசன் செய்யப்பட்டனர். இதில் மக்களின் வாக்குகளை குறைவாக பெற்றதால் சரவண விக்ரம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.