Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Haryana-வின் புதிய முதலமைச்சர் பதவி யாருக்கு? வரும் 15-ம் தேதி பதவியேற்பு விழா!

04:28 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து 3-வது முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அக்டோபர் 15ம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஹரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்தது. அம்மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். சுமார் எட்டரை ஆண்டுகள் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செய்பட்டு வந்தார். கடந்த ஓன்றரை ஆண்டுகளாக அவர் முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில்தான் ஹரியானா சட்டமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67.90% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணியும், ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் களத்தில் இருந்தன.

காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 48 இடங்களை கைப்பற்றி 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. 

இந்த நிலையில், ஹரியானாவில் வரும் 15ம் தேதி பாஜக புதிய அரசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் புதிய முதலமைச்சராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விழாவில் முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளதோடு, அவரோடு சிலர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், பாஜக கூட்டணி கட்சி முதல்வர்கள், தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும் 15ம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள 10 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு பணியை தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
BJPharyanaHaryana electionsnews7 tamilNiyab Singh SainiPM Modi
Advertisement
Next Article