For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விமானப்படையில் 182 காலியிடங்கள்... +2 படிச்சிருந்தா போதும்!

04:06 PM Aug 04, 2024 IST | Web Editor
விமானப்படையில் 182 காலியிடங்கள்     2 படிச்சிருந்தா போதும்
Advertisement

இந்திய விமானப்படையில் டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய விமான படையில் 157 கிளர்க், 18 இந்தி டைப்பிஸ்ட், 7 டிரைவர் பணியிடங்கள் என மொத்தம் 182 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளில் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 1ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

  •  கிளர்க் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
  • இந்தி டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
  • டிரைவர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 வருட முன் அனுபவம் கட்டாயம்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://indianairforce.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tags :
Advertisement