For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாட்டிலேயே அதிக மாசடைந்த நகரம் எது தெரியுமா?

10:35 PM Jan 10, 2024 IST | Web Editor
நாட்டிலேயே அதிக மாசடைந்த நகரம் எது தெரியுமா
Advertisement

மேகாலயா மாநிலத்தின் பைரனிஹட், நாட்டிலேயே அதிகம் மாசுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

சிஆர்இஏ நடத்திய நகரங்களின் மாசு அளவு குறித்து ஆய்வு நடத்தியது. இதில், மேகாலயா மாநிலத்தின் பைரனிஹட் நாட்டிலேயே அதிகம் மாசுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில்,  பிகாரின் பெகுசராய் மற்றும் உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. தில்லியில் மாசு, குளிர்காலத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். ஆற்றல் மற்றும் தூய காற்று ஆய்வு நிறுவனம் (சிஆர்இஏ) நடத்திய இந்த ஆய்வில் 8-வது இடத்தில் தில்லி இடம்பெற்றுள்ளது.

சுனில் தஹியா, தென்கிழக்கு ஆசியாவின் சிஆர்இஏவின் ஆய்வாளர், 2023-ல் 227 நகரங்களில் 75 சதவீதமான நாள்களில் நிலவிய மாசுபாட்டின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இவற்றில் 85 நகரங்கள் ஏற்கெனவே தேசிய தூய காற்றுத் திட்டத்தின் (என்சிஆபி) கீழ் உள்ளடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகள் 2019 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019-ல் முன்னெடுக்கப்பட்ட 20 முதல் 30 சதவீத இலக்கைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட முன்னெடுப்பு பலன் தரவில்லை.

இந்த நிலையில் அரசு 40 சதவீத இலக்கை நிர்ணயித்துள்ளது. 5 ஆண்டுகளாக இந்தத் திட்டம் அமலில் இருந்தும் 131 நகரங்களில் 44 நகரங்கள் மட்டுமே ஆய்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தஹியா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முறையாக செய்யப்படாததால் 64 சதவீத நிதி பயனற்ற முறையில் செலவிடப்பட்டதாகவும் அதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துல்லிய மாசுக்களான பிஎம்10 அளவீட்டில் அதிகமாக இருக்கும் பைரனிஹட் காற்று மாசு சராசரியாக ஒரு கியூபிக் மீட்டருக்கு 301 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. அஸ்ஸாமில் உள்ள சில்சர் பிஎம்10 அளவீட்டில் மிகக் குறைவான பதிவைக் கொண்டுள்ள நகரமாக உள்ளது. அதிக மாசுபாடு கொண்ட 50 நகரங்களில் பிகாரில் 18 நகரமும் ஹரியானாவில் 8 நகரமும் ராஜஸ்தானில் 8 நகரமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement