For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'தக் லைஃப்' டிரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான அறிவுப்பு!

தக் லைஃப் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
09:08 PM May 14, 2025 IST | Web Editor
தக் லைஃப் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
 தக் லைஃப்  டிரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா  வெளியான அறிவுப்பு
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.

Advertisement

இதையும் படியுங்கள் : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தக் லைஃப் படத்தின் டிரெய்லர் மே 17ம் தேதி வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா மே 24ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement