Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'கேப்டன் மில்லர்' முன் வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

12:40 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Advertisement

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன் சுமேஷ்  மூர்,  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது.  இந்நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Captain MillerCaptain Miller PongalCinema updatesDhanushGV PrakashNews7TamilNews7TamilUpdtes
Advertisement
Next Article