”மதராஸி” படத்தின் ஓடிடி ரீலீஸ் எப்போது தெரியுமா..? - வெளியானது அறிவிப்பு.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் மதராஸி. ஆக்சன் திரைப்படமான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. இப்படத்தில் ருக்மணி வசந்த், பிஜி மேனன், வித்யூத் ஜாமால், விக்ராந்த் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 80 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு வெற்றியாகவும், தொடர் தோல்வியில் இருந்த ஏ.ஆர். முருகதாஸுக்கு கம்பேக்காகவும் இப்படம் அமைந்தது.
இந்த நிலையில் மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.